6 நாட்களில் கெளதம் கார்த்திக்கின் ‘ஆகஸ்ட் 16, 1947’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • April 13, 2023 / 08:19 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் கார்த்திக். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘ஆகஸ்ட் 16, 1947’ கடந்த ஏப்ரல் 7-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை அறிமுக இயக்குநர் என்.எஸ்.பொன்குமார் இயக்கியுள்ளார். இதில் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக ரேவதி ஷர்மா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ‘குக் வித் கோமாளி’ புகழ், ரிச்சர்ட் ஆஷ்டன், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இதனை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் தனது ‘ARM புரொடக்ஷன்ஸ்’ மூலமாக தயாரித்துள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இப்படம் ரூ.1.57 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus