Joshua Imai Pol Kaakha : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!
February 16, 2024 / 10:58 AM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகி லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 புகழ் வருண் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஹேய் என்பவர் நடித்துள்ளார். வருணுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார்.
இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிடப்பட்ட இதன் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.