Joshua : கெளதம் மேனன் – ‘பிக் பாஸ்’ வருண் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா’… எதிர்பார்ப்பை எகிற வைத்த ட்ரெய்லர்!

  • February 23, 2024 / 08:08 PM IST

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் ‘ஜோஷ்வா’, ‘துருவ நட்சத்திரம்’ என இரண்டு படங்கள் தயாராகி லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘ஜோஷ்வா’ படத்தில் ‘பிக் பாஸ்’ சீசன் 5 புகழ் வருண் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஹேய் என்பவர் நடித்துள்ளார். வருணுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார்.

இதனை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இதற்கு கார்த்திக் இசையமைத்துள்ளார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தை வருகிற மார்ச் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus