Dhruva Natchathiram : விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் குறித்து கௌதம் மேனன் போட்ட ட்வீட்!

  • November 24, 2023 / 10:54 AM IST

சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். ஒவ்வொரு படத்துக்கும் விக்ரம் தனது கெட்டப்பை மாற்றி ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கி வருகிறார். இவர் நடிப்பில் ‘துருவ நட்சத்திரம், தங்கலான்’ மற்றும் SU.அருண்குமார் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ரித்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே, ரிலீஸ் செய்யப்பட்ட இதன் டீசர்கள், ட்ரெய்லர்கள் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

சமீபத்தில், இப்படத்தின் முதல் பாகத்தை இன்று (நவம்பர் 24-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் “Sorry. நான் நிறைய முயற்சி செய்தும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இன்று என்னால் ரிலீஸ் செய்ய முடியவில்லை. இன்னும் சில நாட்களில் இப்படம் கண்டிப்பாக வெளியாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus