மலையாளத்தில் நடிக்கும் காயத்ரி !

  • April 30, 2022 / 05:58 PM IST

2012-ஆம் வெளியான 18வயசு என்கிற படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் காயத்ரி ஷங்கர் . இந்த படத்தை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் என்கிற படம் மூலம் பிரபலமானார் காயத்ரி . அதன் பிறகு ரம்மி , மத்தாப்பு , சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார் .

இதற்கு முன்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும் படம் மலையாளத்தில் ரீமேக் ஆவதாக இருந்தது . விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடிப்பதாக இருந்தது . ஆனால் இந்த படம் அப்பொழுது தொடங்கவில்லை . இந்நிலையில் நடிகர் காயத்ரி ஷங்கர் மலையாளத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது . ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற படத்தை இயக்கிய ரதிஷ் பாலகிருஷ்ணன் அடுத்து இயக்கும் ‘ இன்னா கேஸ் கொடு ‘ என்கிற படத்தில் நடித்து வருகிறார் .

இதுகுறித்து காயத்ரி பல ஆண்டுகளுக்கு முன்பு தவறவிட்ட மலையாள வாய்ப்பு இப்பொழுது அமைந்து இருக்கிறது . எனது காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது . மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனர் படத்தில் நடிக்கிறேன் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்றுக்கு முன்னதாகவே தொடங்கி விட்டது ஆனால் எனது கேட்ட நேரம் கொரோனாவால் தாமதம் ஆகிவிட்டது . ஆனால் தற்பொழுது படப்பிடிப்பு தொடங்கி விட்டது மேலும் இது கிராம பின்னணியில் உருவாகும் காமெடி படம் என்று தெரிவித்துள்ளார் .மேலும் எனது அம்மா மலையாளி என்பதால் அவர் எனக்கு வசனங்களை சொல்லிக் கொடுத்தார் . இந்த படப்பிடிப்புக்கு குடும்பத்தோடு கேரளா சென்றதாகவும் தெரிவித்தார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus