திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ஜெனிலியா. முதல் படமே பிரம்மாண்டத்தின் உச்சம் தொட்ட படைப்பு. இப்படி பட்ட படங்களில் நடிக்க எல்லோருக்கும் வாய்ப்பு அமையாது. ஆனால், ஜெனிலியாவுக்கு அமைந்தது. 2003-ஆம் ஆண்டு தமிழில் வெளியான படம் ‘பாய்ஸ்’. இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படம் ஜெனிலியா தமிழில் அறிமுகமான முதல் படமாம்.
இந்த படத்தில் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், ஜெனிலியாவிற்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில், ‘சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம்’ என பல படங்கள் இணைந்தது. இதில் ‘ஜெயம்’ ரவியின் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்தில் ஜெனிலியாவின் கியூட்டான நடிப்பு ரசிகர்களை லைக்ஸ் போட வைத்தது.
ஜெனிலியா தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மராத்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். 2012-யில் நடிகை ஜெனிலியா, பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜெனிலியா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.
View this post on Instagram
Sometimes all you need, is to break the routine and have some fun💃🏻💃🏻👍🏼👍🏼
A post shared by Genelia Deshmukh (@geneliad) on