சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் ‘தில்’. விக்ரம் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தில் ஆஷிஷ் வில்லனாக மிரட்டியிருந்தார்.
‘தில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஆஷிஷ் வித்யார்த்திக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘பாபா, ஏழுமலை, பகவதி, தம், கில்லி, ஆறு, அழகிய தமிழ்மகன், பீமா, கந்தசாமி, என்னை அறிந்தால், அனேகன்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
ஆஷிஷ் வித்யார்த்தி தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி, கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒடியா ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

ஏற்கனவே, பாடகியும், நடிகையுமான ராஜோஷியை திருமணம் செய்து கொண்ட ஆஷிஷ் வித்யார்த்திக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில், ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60-வது வயதில் அசாமைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
