Tamannaah Bhatia : கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை தமன்னா… வைரலாகும் வீடியோ!

  • November 17, 2023 / 02:57 PM IST

சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் தமன்னா. தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்தார் தமன்னா. அந்த படம் தான் ‘கேடி’. ‘கேடி’-க்கு பிறகு கதையின் நாயகியாக நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டாகி தமன்னாவுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

அதன் பிறகு தமன்னாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, தோழா, தர்மதுரை, தேவி, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், ஸ்கெட்ச், பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன், ஜெயிலர்’ என படங்கள் குவிந்தது.

தமன்னா தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். தற்போது, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus