சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. ராஷி கண்ணா தனது கேரியரை முதன் முதலில் ஆரம்பித்தது ஹிந்தி திரையுலகில் தான். ஹிந்தியில் முதல் படமாக அமைந்தது ‘மெட்ராஸ் கஃபே’. அதன் பிறகு தெலுங்கில் ‘மனம்’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் வலம் வந்திருந்தார் ராஷி கண்ணா.
‘மனம்’ படத்துக்கு பிறகு ‘ஜோரு, ஜில், ஷிவம், பெங்கால் டைகர், ஹைப்பர், ஆக்ஸிஜன், டச் சேசி சூடு’ என அடுத்தடுத்து சில தெலுங்கு படங்களில் ஹீரோயினாக கலக்கினார். தமிழில் ராஷி கண்ணாவுக்கு முதல் படமே அதர்வாவுக்கு ஜோடியாக அமைந்தது. அது தான் ‘இமைக்கா நொடிகள்’.
இந்த படத்தின் ஹிட்டிற்கு பிறகு நடிகை ராஷி கண்ணாவுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார்’ என தமிழ் படங்கள் குவிந்தது.
இப்போது, ராஷி கண்ணா நடிப்பில் 4 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான போட்டோஷூட் ஸ்டில்ஸ் & வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் & வீடியோ இளசுகளை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.