கார்மேன் குழு மீது வழக்குப்பதிவு – வெப்சீரிஸுக்கும் சென்சார் தேவையா?

  • June 2, 2020 / 11:11 AM IST

சர்ச்சைக்குரிய வெப்சிரீஸான காட்மேனின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான காட்மேன் வெப்சீரிஸின் டிரைலரில் இந்து மதத்தையும் ஆன்மீகப் பெரியோர்களையும்‌ அவமதிக்கும்‌ வண்ணம் காட்சிகள் இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் Zee5ன் காட்மேன் தொடருக்கு கடும்‌ எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து தொடர் புகாரின் காரணாக அதன்‌ டீசர் யூடியூபில் இருந்து நீக்கப்பட்டது.

மேலும் தொடர் திட்டமிட்டபடி வெளியாகும் என படக்குழு கூறிய நிலையில் தற்போது தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த மதத் தலைவர்களை இழிவுப்படுத்தும் விதமாகவும், மோசமான ஒரு சமூகவிரோதி சாமியார் ஆவது போலவும் காட்சியமைக்கப்பட்டுள்ளதால் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். மேலும் காஞ்சி மடத்திலிருந்து இதைப்பற்றி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் பேசியதாகவும் அதனை எடுத்து ஜீ குழும தலைவர் சுபாஷ் சந்திராவிடம் சுவாமி பேசியபோது தொடரை ரத்து செய்வதாக அவர் உறுதி அளித்ததாகவும் சுப்பிரமணிய சுவாமியின் உதவியாளர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜீ குழுமத்தை நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி கையெழுத்து இயக்கங்கள் நடத்தப்பட்டதோடு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சென்சார் செய்யும் ஐபிஃப்(Indian Broadcasting Foundation) அமைப்புக்கு புகார்களும் அனுப்பப்பட்டன. மேலும் இந்து மக்கள் கட்சி சென்னையில் உள்ள ஜீ தொலைக்காட்சி அலுவலகத்திற்கு முன் சமூக இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு போராட்டம் நடத்தியது. இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் காட்மேன் தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்து ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus