நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து வருகிறார் . ராஷ்மிகா நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். பிரபு , சரத்குமார் , பிரகாஷ் ராஜ் ,குஷ்பு , ஷ்யாம் , உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து உள்ளனர் .
இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது . தமன் இசையில் ரஞ்சிதமே என்கிற பாடலை நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடி இருந்தனர் . வெளியான முதல் இந்த பாடல் விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . தமிழ்நாட்டில் வருகிற பொங்கல் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது என்று படக்குழு அறிவித்து இருந்தது .
இந்நிலையில் வாரிசு படத்திற்கு தெலுங்கு திரையரங்கம் முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அறிவிப்பு வெளியானது . இதனால் தமிழகத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது .
இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் இது குறித்து சந்தித்து விவாதித்துள்ளனர். ‘வாரிசு’ படத்திற்கு எந்த விதத்திலும் தடை விதிக்கவில்லை, நேரடி தெலுங்குப் படங்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றுதான் சொன்னோம் ஆந்திரா, தெலங்கானாவில் படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது குறித்த தகவலை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியவற்றிற்கும் தெரிவித்துள்ளார்கள். எனவே, ‘வாரிசு’ படம் தெலுங்கிலும், தெலுங்கு மாநிலங்களிலும் வெளியாவது குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் .