அடேங்கப்பா! இவ்ளோவா?… தனது சம்பளத்தை டக்கென உயர்த்திய ‘குட் நைட்’ மணிகண்டன்!

  • June 1, 2023 / 08:23 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ‘காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார்.

மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘குட் நைட்’ என்ற படம் கடந்த மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படத்தை இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார்.

இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக மீதா ரகுநாத் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, நடிகர் மணிகண்டன் தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus