சூப்பர் ஹிட்டான சரத்குமாரின் ‘நாட்டாமை’… இதற்காக கவுண்டமணி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • March 23, 2023 / 11:23 AM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சரத்குமார். இவரின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நாட்டாமை’. 1994-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இதில் சரத்குமார் அண்ணன் – தம்பி என டபுள் ஆக்ஷனில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். மேலும், மிக முக்கிய ரோல்களில் மீனா, குஷ்பூ, மனோரமா, சங்கவி, கவுண்டமணி, செந்தில், பாண்டு, விஜயக்குமார், பொன்னம்பலம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதனை ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் கவுண்டமணி ரூ.5 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus