அரசின் திடிர் முடிவுக்கு காரணம் என்ன?

  • April 5, 2022 / 12:42 PM IST

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகிறது . இந்த படத்தை கோலமாவு கோகிலா , டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார் . விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார் . இயக்குனர் செல்வராகவன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .

பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து , மற்றும் ஜாலி ஓ ஜிம்கானா ஆகிய இரண்டு பாடல்களும் வெளியாகி ரசிகர்களிடைய மிக பெரிய வரப்பேற்பை பெற்றது . இதன் மூலம் பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது . இதற்கு அடுத்து ஏப்ரல் 2ம் தேதி வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது .

பீஸ்ட் படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ,ஹிந்தி ஆகிய மொழிகளில் பல நாடுகளில் வெளியாகிறது . படத்தின் வெளியிட்டு தேதி நெருங்கி வருவதால் படத்தை விளம்பர படுத்தும் விதமாக நடிகர் விஜய் சன் தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டி கொடுத்துள்ளார் . இது வருகின்ற ஏப்ரல் 10ம் தேதி இரவு வெளியாக இருக்கிறது .

இந்த நிலையில் பீஸ்ட் படத்துக்கு தடை விதித்துள்ளது குவைத் அரசு . பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது எனக்கூறி குவைத் அரசு பீஸ்ட் படத்துக்கு தடை விதித்துள்ளது . இதன் காரணமாக பீஸ்ட் படத்தை குவைத் நாட்டு விஜய் ரசிகர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது . மேலும் படத்தின் படத்தின் வசூலையும் இது பாதிக்கும் என்று கருதப்படுகிறது
இதற்கு முன்னதாக எஃப்.ஐ.ஆர், குரூப் ஆகிய படங்களுக்கும் தடை விதித்திருந்தது குவைத் அரசு என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus