ரஷ்யாவைப் போல சென்னையில் அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்!

  • September 21, 2020 / 09:00 PM IST

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “கோப்ரா”. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் இந்த படம் லாக்டவுன் முடிந்ததும் இதர வேலைகள் தொடங்கும் என்று ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யாவில் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் இந்த படத்திற்காக ரஷ்யா செல்ல முடியாத நிலையில் தற்போது சென்னையில் ரஷ்யாவில் இருப்பது போன்று பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு வருகிறதாம்.

மேலும் அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், வருகிற சம்மர் 2021 ஆம் ஆண்டு இந்த படம் வெளியாவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தற்போது தகவல் வந்துள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் “தும்பி துள்ளல்” என்ற இந்த படத்தின் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus