‘விஜய் 65’-க்காக போடப்படும் பிரம்மாண்ட செட்… அடுத்த ஷெடியூலுக்கு நாள் குறித்த நெல்சன்!

  • June 17, 2021 / 10:19 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்தார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும், மிக முக்கிய ரோலில் பாப்புலர் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நடிக்கிறார்.

சமீபத்தில், இந்த படத்தின் முதல் ஷெடியூல் ஷூட்டிங் ஜார்ஜியாவில் முடிவடைந்தது. பின், கொரோனா நோயின் இரண்டாவது அலை தாக்கம் அதிகமானதால் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டது. தற்போது, ‘விஜய் 65’ படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் சென்னையில் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் ஒன்று போடப்படுகிறதாம். இந்த செட்டில் ஒரு பாடல் காட்சியை படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus