கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அளித்த ஜி.வி.பிரகாஷ் !!

  • October 4, 2022 / 09:50 AM IST

கடந்த 2006ஆம் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான படம் வெயில் . இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தவர் ஜி.வி.பிரகாஷ் . இது தான் இவரது முதல் படம் . இந்த பல வெற்றி படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார் . பல நல்ல நல்ல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார் . 2014ஆம் ஆண்டு வரை இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் 2015ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் .

தற்போது தனக்கென ஒரு இடத்தை தமிழ்சினிமாவில் இவர் பிடித்துள்ளார்‌. சமிபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஐங்கரன் , செல்ஃபி, உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.ஜி.வி.பிரகாஷ் அடுத்து இயக்குனர் பூபதி பாண்டியனுடன் இணைந்து ஒரு காமெடி படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது . மேலும் சூர்யா , தனுஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் .

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் சமூகத்தில் கஷ்டப்படும் பலருக்கு தன்னால் இயன்ற உதவியை செய்து வருகிறார் . அந்த வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண் தான் கும்பகோணத்தில் பி.சி.எ படித்து வருகிறேன் இந்த மாதம் தேர்வு தொடங்க உள்ளது அதற்கு படம் வேண்டும் என்று கேட்டுள்ளார் உடனே அந்த பெண்ணின் கூகுள் பே மூலம் பணத்தை அளித்து இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ் . தற்போது ஜி.வி.பிரகாஷ் அவர்களின் இந்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus