சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. கொரோனா லாக்டவுன் காரணமாக தற்போது திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஓடிடியில் இந்த படத்தை வெளியிட பலர் முயற்சி செய்து வந்த நிலையில் திரையரங்குகளில் இந்த படத்தை வெளியிடுவதற்கான முழு முயற்சியில் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சூர்யா இறங்கியுள்ளார்.
வருகிற ஜூன் 23ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடவிருக்கும் சூர்யா, அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பரிசாக சூரரைப்போற்று டிரெய்லரை வெளியிட வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ஏற்கனவே எப்போது இந்த படத்தின் டிரெய்லரை வெளியிட வேண்டும் என்று தேதி முடிவு செய்து விட்டதால், எப்படி சூர்யாவின் பிறந்த நாளன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுப்பது என்று திரைப்படக்குழுவினர் யோசித்து வந்தார்கள்.
இதை தொடர்ந்து நேற்று இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் “சூரரைப்போற்று படக்குழுவினரிடமிருந்து.. சூர்யாவின் பிறந்த நாளன்று ஒரு சர்ப்ரைஸ் வரவுள்ளது! இதை பற்றிய விபரங்கள் பின்வரும் நாளில் வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்து சூர்யாவின் பிறந்த நாளன்று இந்த படத்தை பற்றிய ஏதோ ஒரு புதிய அப்டேட் வரப்போகிறது என்று அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படம் ஏர் டெக்கான் உரிமையாளர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவிய கதையை கொண்டதாகும். இந்த படத்தில் நடித்திருக்கும் சூர்யா இந்த படத்தை தயாரித்தும் உள்ளார். இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப், பரேஷ் ரவால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.