அடேங்கப்பா… 10 நாட்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘அடியே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • September 5, 2023 / 12:00 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளராகவும், ஹீரோவாகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘அடியே’ கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கட் பிரபு, மிர்ச்சி விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் (ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 3 வரை) இந்த படம் ரூ.14.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus