Rebel : ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘ரிபெல்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

  • November 13, 2023 / 12:09 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களிலும், நடிகர்களிலும் ஒருவராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படம் ‘ரிபெல்’. இந்த படத்தை நிகேஷ்.ஆர்.எஸ் இயக்கி வருகிறார்.

இதில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வெங்கிடேஷ், ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் குமாரே இசையமைத்து வரும் இதற்கு, அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார், வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இதனை ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus