வாடிவாசல் தீவிர இசைக்கோர்ப்பில் GVP

  • April 15, 2020 / 10:00 PM IST

சூரரைப்போற்று திரைப்படத்திற்கு பின் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் இசைக்கோர்ப்பில் ஜீவி பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

புத்தாண்டான நேற்று சூரரைப்போற்று படத்தின் மேக்கிங் ஆஃப் மாறா வெளியிடப்பட்டது. அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக சூர்யா மெனக்கெடும் காட்சிகளை பார்த்து ஆச்சர்யத்தில் ஆழ்ந்த அவரது ரசிகர்கள் அந்த வீடியோக்களை ஷேர் செய்து சமூக வலைதளத்தை திக்குமுக்காட வைத்தனர்.

GV Prakash Started to compose for his 75th Movie Vaadivasal acted by Suriya1

இந்நிலையில் சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் இசைக்கோர்ப்பில் பிசியாக இருப்பாக ட்வீட் செய்திருந்தார். இதனால் வாடிவாசல் ஜுரம் ரசிகர்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது. பின்ன இருக்காதா…தோல்விகளையே காணாத வெற்றி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மட்டுமல்ல சூர்யாவும் பெரிதும் இந்த படத்தை எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார்.

காரணம் சிங்கம் படத்தை தொடர்ந்து சூர்யாவின் படங்கள் பெரிதும் ஏதும் வெற்றிபெறவில்லை. தானா சேர்ந்த கூட்டம் மட்டும் ஏதோ போட்ட காசை எடுப்பது போல ஓடியது. ஆனால் காப்பான், என்ஜிகே ஆகிய படங்கள் ஏதும் சொல்லிக்கொள்ளும் அளவு ஓடவில்லை. இதனால் மனதளவில் சூர்யா மிகவும் சோர்ந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. சூரரைப்போற்று படத்தை அவர் பெரிதும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவால் பட ரிலீஸ் தற்போது தள்ளிப்போயுள்ளது.

எது நடந்தாலும் சரி, வாடிவாசல் பட்டைய கிளப்புவது உறுதி. குறிப்பாக இசையில்… இது ஜிவிபிரகாஷின் 75வது படமாச்சே, இசையில் அவர் சொல்லி அடிப்பார் என்கிறார்கள் அவரின் ரசிகர்கள். வாடிவாசல் படம் சி.சு.செல்லப்பா அவர்கள் எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை தழுவி எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus