‘அஜித் 61’-ஐ இயக்கும் சுதா கொங்கரா… மாஸான அப்டேட் சொன்ன ஜி.வி.பிரகாஷ்!

  • September 21, 2020 / 05:25 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து கடந்த ஆண்டு (2019) வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

ரஜினியின் ‘காலா’ படத்தில் ‘ஜரீனா’ கதாபாத்திரத்தில் வந்த ஹூமா குரேஷி தான் இந்த படத்தில் ஹீரோயினாம். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டது. சமீபத்தில், 75 நபர்களை மட்டும் வைத்து சில நிபந்தனைகளுடன் ஷூட்டிங் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்து விட்டது.

விரைவில் ‘வலிமை’யின் புதிய ஷெடியூல் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. சமீபத்தில், அஜித்தின் 61-வது படத்தை பெண் இயக்குநர் சுதா கொங்கரா இயக்க உள்ளதாக தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் ட்விட்டரில் “இயக்குநர் சுதா கொங்கரா இந்த ஸ்க்ரிப்ட் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறார். இது ஒரு செம்ம ஆக்ஷன் ஸ்க்ரிப்ட். நடந்ததுன்னா செமையா இருக்கும்” என்று கூறியுள்ளார்.

https://twitter.com/PktaiAjithfans/status/1307873665095098368

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus