தமிழ் திரையுலகில் ஒரே நேரத்தில் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும் கலக்கி வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். 2006-ஆம் ஆண்டு ‘வெயில்’ என்ற படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இளம் வயதில், அவரின் இசைப் பயணம் ஆரம்பமானது. ஜி.வசந்த பாலன் இயக்கியிருந்த அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. ‘வெயில்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இசையமைக்க வாய்ப்புகள் குவிந்தது.
அடுத்ததாக அஜித்தின் ‘கிரீடம்’, தனுஷின் ‘பொல்லாதவன்’, ரஜினிகாந்தின் ‘குசேலன்’, கார்த்தியின் ‘ஆயிரத்தில் ஒருவன்’, விக்ரமின் ‘தெய்வத் திருமகள்’ என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து விட்டார் ஜி.வி.பிரகாஷ் குமார். இசையமைப்பாளராக டாப் கியரில் சென்று கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ் குமார், 2015-ஆம் ஆண்டு ‘டார்லிங்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்தார். அதுக்கு கிடைத்த வரவேற்பால், அடுத்து ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டாக, ஜி.வி.பிரகாஷின் கால்ஷீட் டைரியில் நடிக்கவும் ஆஃபர்கள் குவிந்தது.
இப்போது இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு பல படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘பேச்சலர்’ எனும் படத்தை சதீஷ் செல்வக்குமார் இயக்க, ஹீரோயினாக திவ்யபாரதி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
It’s a wrap for #bachelor shoot … after an extensive shoot of 15 days in chennai and Bangalore … thank u @dir_Sathish @AxessFilm @Dili_AFF #thenieswar @divyabarti2801 @Sanlokesh @DoneChannel1 pic.twitter.com/R5cqJykITi
— G.V.Prakash Kumar (@gvprakash) October 6, 2020