தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் கௌதம் வாசுதேவ் மேனன் என்றும் இருப்பார். இவர் இயக்கத்தில் காதல் படங்களும், போலீஸ் கதை தொடர்பான படங்களும் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.
இவர் இயக்கத்தில் மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றி படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்ததுள்ளது.
இவர் ஒரு நேர்காணலில் தன் தந்தையின் ஆசையை அவர் இறப்பதற்கு முன் நிறைவேற்றியதைப் பற்றி நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.
இவர் தந்தை கமலின் பெரிய ரசிகர் என்பதால் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பை தனது இல்லத்தில் செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி அவருக்கு மறக்க முடியாத அனுபவத்தை தருவதற்காக வேட்டையாடு விளையாடு படத்தில் “கற்க கற்க” என்ற பாடலில் ஒரு இடத்தில் தன் தந்தை வருவது போன்ற காட்சியை அமைந்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு “வேட்டையாடு விளையாடு” படம் வெளியானது, அதற்கு அடுத்த வருடம் அவர் தந்தை இறந்து விட்டார். அதுமட்டுமின்றி இவர் தந்தையை இன்ஸ்பிரேசானாக வைத்துதான்
“வாரணம் ஆயிரம்” படத்தில் வரும் தந்தை கதாபாத்திரத்தில் உருவாக்கினாராம்.
கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது வரும் நடிப்பில் “ஜோஷ்வா இமைபோல் காக்க” படத்தையும், நடிகர் விக்ரம் நடிப்பில் “துருவநட்சத்திரம்” படத்தையும் இயக்கி வருகிறார். சமீபத்தில் இவர் ஜோஷ்வா படத்தில் ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்.