1981ம் வருடம் வெளிவந்த “வா இந்தப் பக்கம்” தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். இவர் “குருதிப்புனல்” படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரமெடுத்தார்.
இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய பிற மொழி படங்களிலும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவர் இயக்குனர் மணிரத்னமுடன் இணைந்து ஒளிப்பதிவு செய்த மௌனராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அலைபாயுதே ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது
இந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் பி.சி.ஸ்ரீராம். இவர் ஒளிப்பதிவில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ‘சைக்கோ’.
இதை தொடர்ந்து இவர் தற்போது கௌதம் வாசுதேவ் மேனனுடன் இணைந்து ஒரு வெப்சீரிஸ் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லாக்டவுன் முடிந்ததும் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “என்னை நோக்கி பாயும் தோட்டா”. இதைதொடர்ந்து இவர் விண்ணைத்தாண்டி வருவாயா வின் சீக்குவலான “கார்த்திக் டயல் செய்த எண்” என்ற குறும்படத்தை சமீபத்தில் வெளியிட்டார்.
இந்த இரண்டு பெரிய கலைஞர்களும் அடுத்து இணையும் வெப்சீரிஸ் எது என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.