ஆரம்பமானது அஜித்தின் 61-வது படத்தின் ஷூட்டிங்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

  • April 11, 2022 / 03:11 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் ‘வலிமை’-க்காக அஜித் கூட்டணி அமைத்தார்.

இந்த படம் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச் வினோத்தே இயக்க, போனி கபூர் தயாரிக்கிறாராம்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, இதன் ஷூட்டிங் இன்று (ஏப்ரல் 11-ஆம் தேதி) முதல் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை இந்த ஆண்டு (2022) தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus