கமல்ஹாசனின் 233-வது படத்தை இயக்கும் ஹெச்.வினோத்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

  • July 5, 2023 / 10:10 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மணிரத்னம் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், கமலின் 233-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஹெச்.வினோத் இயக்கவிருக்கிறார். இதனை கமலே தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளாராம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus