சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. சமீபத்தில், ஹன்ஷிகா தனது நீண்ட கால நண்பரும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபருமான சோஹேல் கதுரியாவை காதலித்து வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இவர்களின் திருமணம் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ‘Mundota’ அரண்மனையில் நடைபெறவிருக்கிறது. இப்போது ஹன்ஷிகா நடிப்பில் தமிழ் மொழியில் ‘பாட்னர், ரவுடி பேபி’, இயக்குநர் ஆர்.கண்ணன் படம், இயக்குநர் விஜய் சந்தர் படம் மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ஆர்.கண்ணன் இயக்கும் படம் எமோஷனல் ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகவுள்ளதாம். இந்த படத்தில் ஹன்ஷிகா டபுள் ஆக்ஷனில் நடிக்கவிருக்கிறார். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், ஹன்ஷிகாவும், இயக்குநர் ஆர்.கண்ணனும் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.