ஹன்ஷிகா – சிலம்பரசன் ஜோடியாக நடித்துள்ள ‘மஹா’… ரிலீஸானது சூப்பரான டீசர்!

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஹன்ஷிகா மோத்வானி. இப்போது ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் தமிழ் மொழியில் ‘மஹா, பார்ட்னர்’ மற்றும் தெலுங்கு மொழியில் ‘மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘மஹா’ படத்தை ஜமீல் இயக்க, மிக முக்கிய ரோல்களில் சிலம்பரசன், ஸ்ரீகாந்த், கருணாகரன், தம்பி இராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரிலீஸுக்காக நடிகை ஹன்ஷிகா மோத்வானி மற்றும் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். கடந்த ஜூலை மாதம் 2-ஆம் தேதி இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசரை டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் புதிய டீசரை ரிலீஸ் செய்துள்ளனர். இப்புது டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. மிக விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.