தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன்’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், செல்வராகவன், ராம் குமார், வெற்றி மாறன் படங்கள் மற்றும் ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ என ஏழு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் சுப்புராஜின் ‘ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது. பின், ‘கொரோனா’ பிரச்சனையால் திரையுலகில் அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனந்த்.எல்.ராயின் ‘அட்ராங்கி ரே’ படத்தின் 2-ஆம் ஷெடியூல் ஷூட்டிங்கை மதுரையில் வருகிற அக்டோபர் மாதம் நடத்த ப்ளான் போட்டுள்ளனர்.
‘கர்ணன், அட்ராங்கி ரே’ படங்களின் படப்பிடிப்புகள் முடிந்ததும், கார்த்திக் நரேன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வாராம் தனுஷ். சமீபத்தில், ‘சன் பிக்சர்ஸ்’-க்கு ஒரு படம் பண்ண ஒப்புக் கொண்டார் தனுஷ். இந்த படத்தை மித்ரன்.ஆர்.ஜவஹர் தான் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. தற்போது, இதில் தனுஷுக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி டூயட் ஆடப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, ‘மாப்பிள்ளை’ என்ற படத்தில் தனுஷ் – ஹன்ஷிகா ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.