• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » சூர்யா பிறந்தநாளையொட்டி குவியும் வாழ்த்துகள்!

சூர்யா பிறந்தநாளையொட்டி குவியும் வாழ்த்துகள்!

  • July 23, 2020 / 12:21 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
சூர்யா பிறந்தநாளையொட்டி குவியும் வாழ்த்துகள்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரின் பிறந்தநாளையொட்டி இணையதளம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள்.

1997 ஆம் வருடம் வசந்த் இயக்கத்தில் மணி ரத்னம் தயாரிப்பில் வெளியான “நேருக்குநேர்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார் சூர்யா.

ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இவருக்கு சூர்யா என்ற பெயரை மணிரத்னம் தான் வைத்துள்ளார். இவரது இயற்பெயர் சரவணன். அதுமட்டுமின்றி 1995 ஆம் வருடம் “ஆசை”யெனும் வசந்த் படத்தில் நடிப்பதற்கு இவரை அணுகியதாகவும், நடிப்பில் அவ்வளவாக ஆர்வம் இல்லாததால் இதை நடிகர் சூர்யா நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.

இவரின் முதல் படமான “நேருக்கு நேர்” படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த சூர்யா, 1999ஆம் வருடம் “பூவெல்லாம் கேட்டுப்பார்” எனும் படத்தில் நடிகை ஜோதிகாவுடன் இணைந்து ஹீரோவாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து 2001ம் வருடம் சித்திக் இயக்கத்தில் வெளியான “பிரண்ட்ஸ்” படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த சூர்யா இந்தப் படத்தில் அவரது நடிப்பிற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

ஆரம்பகாலத்தில் நம்பிக்கையின்மை, நடனம் மற்றும் சண்டை பயிற்சியில் அனுபவம் இல்லாததால் நடிப்பில் அதிக சிரமத்திற்கு உள்ளானேன் என்று கூறிய சூர்யாவிற்கு குணச்சித்திர நடிகரான ரகுவரன் தான் நம்பிக்கை கொடுத்தாராம்.

பின்பு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “நந்தா” திரைப்படம்தான் நடிகர் சூர்யாவுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்த படத்தில் அவரது சிறந்த நடிப்பிற்காக பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார்.

இதை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் “உன்னைநினைத்து” மற்றும் அமீர் இயக்கத்தில் “மௌனம் பேசியதே” ஆகிய திரைப்படங்கள் மூலம் தனக்கென பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றார் நடிகர் சூர்யா.

அதில் தொடங்கி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காக்க காக்க, பாலா இயக்கத்தில் பிதாமகன், பேரழகன், கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், ஏழாம் அறிவு, 24, காப்பான், என் ஜி கே போன்ற வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.

இவர் நடிகை ஜோதிகாவை 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு தியா, தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.அவர்களின் பெயரையொட்டியே “2டி” என்று தங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெயரிட்டுள்ளனர்.

தற்போது சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் “சூரரைப்போற்று” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தை இவரது தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனமே தயாரித்துள்ளது. இந்த படத்தை சூர்யாவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் சூர்யாவிற்கு அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை இணையதளத்தில் குவித்து வருகிறார்கள்‌.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #Actress Suriya
  • #Suriya

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Suriya & Vaaranam Aayiram : ரீ-ரிலீஸான சூர்யாவின் ‘வாரணம் ஆயிரம்’… கர்நாடகாவில் செய்த வசூல் சாதனை!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அட்டகாசமான அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Suriya & Ravikumar : சூர்யா – ‘அயலான்’ ரவிக்குமார் கூட்டணியில் உருவாகப்போகும் படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்?

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Kanguva : சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் அசத்தலான அப்டேட் கொடுத்த ஒளிப்பதிவாளர் வெற்றி!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Suriya & Jyotika : தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகாவுடன் பின்லாந்துக்கு சுற்றுலா சென்ற சூர்யா… வைரலாகும் வீடியோ!

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

Kanguva : சூர்யா – சிவா கூட்டணியில் உருவாகும் ‘கங்குவா’… எப்போது ரிலீஸ் தெரியுமா?

trending news

latest news

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

Absolutely Gaming site – Din Manual til Spillemuligheder, Bonusser og Beskyttelse

3 days ago
Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

Spintowin Casino – Din personliga Kompletta Guide till Fängslande Spelupplevelser

3 days ago
Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

Play Me Casino : Ce Guide Exhaustif du Divertissement de Casino Révolutionnaire

3 days ago
Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

Magius Casino – Din egen omfattende guide til spill og tidsfordriv

3 days ago
God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

God of Wins – Din Ultimative Destination for Casino Underholdning

3 days ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version