தெலுங்கில் தற்போது முன்னணி நடிகராக வளம் வருபவர் விஜய்தேவரகொண்டா. இவர் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தார். பின்பு நோட்டா, வோர்ல்ட் பேமஸ் லவர் போன்ற நேரடி தமிழ் படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் தற்பொழுது ஊரடங்கு உத்தரவால் வலைத்தளங்கில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக “RealMan” என்கின்ற சவாலை ஏற்று ஒரு வீடியோ பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் போலியான வதந்திகள் மற்றும் கிசுகிசுக்கள் வெளியிடும் இணைய தள பக்கங்களை நீக்குவதற்கு லாக்டவுனில் முயற்சிகள் மேற்கொண்டார். அவரது முயற்சிக்குச் சிரஞ்சீவி, நாகார்ஜூனா போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கோலிவுட் இளம் நடிகர், தாராள பிரபு பட ஹீரோ ஹரீஷ் கல்யாணும் அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறும்போது. மக்கள் மீது அன்பும் அவர்களுக்கு உதவும் மனப்பான்மைக்கும் ஹாட்ஸ் ஆப் விஜய்தேவர கொண்டா . வருங்காலத்தில் இதை நானும் பின்பற்றுவேன். மேலும் ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகமே போலி செய்திகள், கிசுசிசுக்களை களைவதற்காகத் திரண்டிருக்கிறது. பிரபல நடிகர்களும், தயாரிப்பாளர்களும் தங்களுக்கு ஒத்துழைப்பு அளித்திருக்கின்றனர்.
இது ஒற்றுமையை வலியுறுத்தியிருக்கிறது. தமிழ் திரையுலகிலும் ஒற்றுமையாக இருந்தால், ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டினால் கண்டிப்பாக நமக்கெதிரான தடைகளிலிருந்து வெளிவர முடியும். இந்த லாக் டவுன் காலத்தில் அதனைச் செய்யமுடியும். அது ஆச்சரியப்படத்தக்க மாற்றங்களை நமக்கும் நமது திரையுலகுக்கும் ஏற்படுத்தும் எனத் தெரிவித்திருக்கிறார் ஹரீஷ் கல்யாண்.