2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
பிறகு இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், ஜெர்சி, தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது “கசடதபற” என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் “பெல்லி சூபுலு” எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்துவருகிறார்.
சமீபத்தில் ஹரீஷ் கல்யாண் இயக்குனர் சசி பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு அவருடன் அடுத்த படத்தில் பணிபுரிய ஆவலாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சசிகுமார் இயக்கத்தில் விரைவில் ஹரீஷ் கல்யாண் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
Happy Birthday Sasi sir.. From watching your films and now to be working with you in your next project it feels overwhelming, thanks & looking forward to start shoot. #HBDSasi
— Harish Kalyan (@iamharishkalyan) September 9, 2020