ஹரிஷ் கல்யாணின் ‘எல்.ஜி.எம்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்ளோ தெரியுமா?

  • July 29, 2023 / 04:11 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் ‘எல்.ஜி.எம், நூறு கோடி வானவில், டீசல், லப்பர் பந்து’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘எல்.ஜி.எம்’ படம் நேற்று (ஜூலை 28-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார்.

மேலும், மிக முக்கிய ரோல்களில் நதியா, யோகி பாபு, RJ விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, இப்படம் நேற்று தமிழ்நாட்டில் மட்டும் ரூ.92.14 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus