ஹரிஷ் கல்யாணின் அடுத்த திரைப்படத்தின் அப்டேட்!

  • December 7, 2020 / 03:42 PM IST

2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது இவர் பிரபல இயக்குனரான சசி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.

தற்போது மீண்டும் பியார் பிரேமா காதல் அப்படத்தின் குழு இணைந்து (HEY) அடுத்த படத்தில் பணிபுரிய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் இளன், யுவன் சங்கர் ராஜா மற்றும் ஹரிஷ் கல்யாண் இந்தப் படத்தில் இணைகிறார்கள். விரைவில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் செய்தி விடுத்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus