Parking : 3 நாட்களில் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

  • December 4, 2023 / 06:15 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் ‘பார்க்கிங், நூறு கோடி வானவில், டீசல், லப்பர் பந்து’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘பார்க்கிங்’ படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.

இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும்,மிக முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, பிரார்த்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 3 நாட்களில் இப்படம் ரூ.2.85 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus