Parking : ஹரிஷ் கல்யாண் – இந்துஜா ஜோடியாக நடித்துள்ள ‘பார்க்கிங்’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • November 29, 2023 / 05:27 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் ‘பார்க்கிங், நூறு கோடி வானவில், டீசல், லப்பர் பந்து’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘பார்க்கிங்’ படத்தை அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

மேலும்,மிக முக்கிய ரோல்களில் எம்.எஸ்.பாஸ்கர், ரமா, பிரார்த்தனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிலோமின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியை பார்த்த சில பத்திரிக்கையாளர்கள் ‘பார்க்கிங்’ டீமை பாராட்டி ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus