2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஹரீஷ் கல்யாண் 2018 ஆம் ஆண்டு இலன் இயக்கத்தில் வெளியான “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமும் ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
பிறகு இஸ்பேட்ராஜாவும்இதயராணியும், ஜெர்சி, தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு போன்ற படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது “கசடதபற” என்னும் படத்தில் நடித்து வருகிறார். மேலும் “பெல்லி சூபுலு” எனும் தெலுங்கு படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடித்துவருகிறார்.
மேலும் இயக்குனர் சசியுடன் இணைந்து அடுத்த ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் செய்தி வெளியிட்டுருந்தார். இதையொட்டி நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது லுக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இது அவரின் அடுத்த படத்திற்கான லுக்கா என்ற கேள்விகள் அவரது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.