லாக்டவுனில் என்ன செய்வது என்று தெரியாமல் நடிகர் நடிகைகள் தொடர்ந்து பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
தீரன், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். அருண் விஜய் ஹீரோவாக நடித்த தடையறத் தாக்க படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமாகமானவர் ரகுல். தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிப்படங்களிலும் அவர் நடித்து அசத்தி வருகிறார்.
லாக்டவுன் காரணமாக உலக திரையுலகமே வீட்டிற்குள் முடங்கியுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால் பிரபலங்கள் சமூக வலைதளத்தில் ஆர்வமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ரகுல் ப்ரீத் சிங் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது தம்பியுடன் சிறுவயதில் விளையாடியதை போல லாக்டவுனில் தற்போது கபடி விளையாடி நேரத்தை கழிப்பதாகவும், சிறு வயதில் விளையாடிய அனைத்து விளையாட்டுக்களையும் மீண்டும் துவங்க இருப்பதாகவும் இன்ஸ்டா பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
#Rakul #RakulPreetSingh #Telugu #actress #video #filmyfocus
A post shared by Filmy Focus (@filmyfocus) on
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் ஹீரோயின் ரகுல் என்பது குறிப்பிடத்தக்கது.