பிறந்தநாளை கொண்டாடும் பிரபல நடிகர் ஜெயம் ரவி!

  • September 10, 2020 / 04:06 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

2003-ம் ஆண்டு வெளிவந்த “ஜெயம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ‘ரவி’. இவரது சகோதரரான மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் நடித்த ரவி, இந்த படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு “ஜெயம் ரவி”என்று அழைக்கப்பட்டார்.

இவர் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தீபாவளி, தாம்தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனிஒருவன், மிருதன், டிக் டிக் டிக் போன்ற எண்ணற்ற வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “கோமாளி”. இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து இவர் பூமி, ஜனகனமன, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.லாக்டவுன் காரணமாக இந்த படங்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் தன் நடிப்புத் திறமையை அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த நடிகர் தமிழ் திரையுலகிற்கு வந்து 17 வருடங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

இவ்வளவு சக்சஸ்ஃபுல்லான ஹீரோ தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இவரது ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இணைய தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

1

2

3

4

5

6

7

8

9

10

11

12

13

14

15

16

17

18

19

20

21

22

23

24

25

26

27

28

29

30

31

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus