‘ஒரு ஷாட் மட்டுமே எடுத்துட்டு பேக்கப் சொல்லிடுவாரு’… இயக்குநர் விலகியதற்கான காரணத்தை சொன்ன ஹீரோ!

  • June 24, 2021 / 04:11 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் அந்த ஆக்ஷன் ஹீரோ. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் மாஸ் காட்டி வரும் இந்த ஹீரோவின் புதிய படம் சமீபத்தில் வெளியானது. ஆனால், அந்த சைபர் க்ரைம் த்ரில்லர் ஜானர் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்ததாக துப்பறியும் படத்தின் பார்ட் 2-விலும், எதிரி என்ற படத்திலும், அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்திலும் நடித்து வருகிறார் அந்த ஆக்ஷன் ஹீரோ. அந்த துப்பறியும் படத்தின் பார்ட் 1 வெற்றிக்கு அதன் இயக்குநரின் திரைக்கதையும், மேக்கிங்கும் தான் முக்கிய காரணம். பார்ட் 2-வையும் ஆரம்பத்தில் அதே இயக்குநர் தான் இயக்கி வந்தார். பின், சில பிரச்சனைகளால் அந்த இயக்குநர் படத்திலிருந்து விலகி விட்டார்.

Hero Says Director Opted Out For This Reason1

அவர் விலகினால் என்ன? நானே பேலன்ஸ் படத்தை இயக்கி வெளியிடுகிறேன் என்று அந்த ஆக்ஷன் ஹீரோவே களமிறங்கினார். இந்த படத்தின் புதிய ஷெடியூல் ஷூட்டிங்கை லண்டனில் அடுத்த ஆண்டு (2022) ஜனவரி மாதத்தில் இருந்து ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் வெளியேறியது தொடர்பாக ஆக்ஷன் ஹீரோ மீடியாவுக்கு கொடுத்துள்ள ஒரு பேட்டியில் “லண்டனில் இதன் ஷூட்டிங் நடந்தபோது, இயக்குநர் தூங்கி எழுந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவே காலை 11 மணிக்கு மேல் ஆகிவிடும். அதுமட்டுமின்றி, வந்ததும் ஒரு ஷாட் மட்டுமே எடுப்பார். அப்புறம் பேக்கப் என்று சொல்லிவிட்டு போய்விடுவார். இதே மாதிரி தொடர்ச்சியாக அவர் செய்து வந்தார். இப்படி பண்ணால் எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையே மூடும் நிலை ஏற்பட்டிருக்கும். இதனால் தான் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு அவர் விலகினார்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus