1.கார்த்தி:(8crores)
நடிகர் கார்த்தி தற்போது அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்களில் பத்தாவது இடத்தில் இருக்கிறார். இதற்கு முன் இந்த இடத்தில் நடிகர் சிம்பு இருந்தார். தற்போது அதிக பட வாய்ப்பு இல்லாததால் இந்த இடத்தை பிடித்துள்ளார் கார்த்தி.கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் “காற்று வெளியிடை” படத்தில் நடித்தது முதல் மிகவும் பிரபலம் அடைந்ததால் இவரது குறைந்த அளவு சம்பளமே ரூபாய் 8 கோடி ஆகும்.
2.விஜய் சேதுபதி: (8 -10 crores)
தற்போது நடிகர் விஜய் சேதுபதி அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் இவரது நடிப்பில் ஏதாவது ஒரு சிறந்த படம் வந்துவிடுகிறது. அதனால் விஜய் சேதுபதி 8 – 10 கோடி வரை தனது சம்பளம் என்று குறிப்பிட்டுள்ளார்.
3.சிவகார்த்திகேயன்: (10 – 12 crores)
சிவகார்த்திகேயன் சமீபத்தில்தான் திரையுலகத்தில் பிரபலமானாலும் தனக்கென்று பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இவரது படங்கள் மாபெரும் வெற்றி அடைந்து வருகிறது. இவரது படங்கள் அதிக வசூல் வேட்டையில் இறங்குவதால் சிவகார்த்திகேயன் தற்போது தனது சம்பளத்தை 10 முதல் 12 கோடி வரை நிர்ணயித்திருக்கிறார்.
4.தனுஷ்: (15 crores)
தனுஷ் தமிழில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் நடித்து தற்போது புகழ்பெற்ற நடிகராக விளங்குகிறார். இவர் “துள்ளுவதோ இளமை” படத்தில் தொடங்கி கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த “பட்டாசு” திரைப்படம் வரை தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இவர் தற்போது தனது படத்திற்கு 15 கோடி முதல் சம்பளமாக பெறுகிறார்.
5.விக்ரம்: (20 crores)
சியான் விக்ரம் பல வருடங்களாக சினிமா துறையில் பிரபலமான நடிகர். இவர் படங்களில் எப்பொழுதுமே வித்தியாசமான கதைக்களம் அமைந்திருக்கும். இவர் தற்போது தனது படங்களுக்கு 20 கோடி முதல் சம்பளத்தை பெற்று வருகிறார்.
6. சூர்யா: (20 – 22 crores)
நடிகர் சூர்யா தற்போது “காப்பான்” , “என்ஜிகே” போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆரம்பம் முதலே தன் நடிப்பிற்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இந்த நடிகர் தனது சம்பளமாக 20 முதல் 22 கோடி வரை பெற்று வருகிறார். இவர் நடித்த படமான “சூரரைப்போற்று”பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
7. கமல்ஹாசன்: (25-30 crores)
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதில் வல்லவரான நடிகர் கமல்ஹாசன், அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “இந்தியன் 2” , இவர் தனது குறைந்த அளவு சம்பளத்தை 25 கோடியாக நிர்ணயித்துள்ளார்.
8. அஜித்: (40 – 50 crores)
தமிழில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தல அஜித். தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ள நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “நேர்கொண்டபார்வை”. இந்தப் படத்தில் அவர் 50 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் இதற்கு முன்னர் 45 கோடி வரை பெற்று வந்ததாகவும் திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
9. விஜய்:(45 – 50crores)
தமிழில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய், இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே 45 முதல் 50 கோடி வரை சம்பளம் பெற்று வந்ததாகவும் மாஸ்டர் படத்தில் இதைவிட அதிகமான சம்பளத்தை பெற்று உள்ளார் என்றும் செய்தி வந்துள்ளது.
10. ரஜினி: (100 crores)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் எப்பொழுதுமே அதிக சம்பளம் பெறும் நடிகராக தமிழ் திரையுலகில் திகழ்ந்து வந்தார். இவர் தனது “தர்பார்” படத்தில் 100 கோடி சம்பளம் பெற்றதாக செய்தி வந்துள்ளது. அதற்கு முன்பு வரை 60 கோடி முதல் சம்பளம் பெற்று வந்த ரஜினி தனது கடைசி தர்பார் படத்தில் தான் தனது சம்பளத்தை 100 கோடியாக ஏற்றியுள்ளார்.