இந்தியில் ஸ்ரிராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படமான “அந்தாதூன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவுள்ளதாக செய்தி வந்துள்ளது.
இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கார்த்திக் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கலாம் என்றும் கூறியுள்ளார்கள். இது மட்டுமின்றி இந்த படத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கிறாராம்.
மேலும் இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் இருப்பார்கள் என்றும் அந்த வேடத்தில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளான காஜல்அகர்வால், திரிஷா, நயன்தாரா போன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
பல நாட்களுக்கு பிறகு வெற்றிப் படத்தின் ரீமேக் படத்தில் நடிக்கவிருக்கும் பிரசாந்துக்கு இந்த படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம்.
இசை சம்பந்தப்பட்ட மர்ம கதையை கொண்டுள்ள இந்த திரைப்படம் டார்க் காமெடி வகையறா. எனவே தமிழில் இந்தப் படம் பெரிதாக வரவேற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மோகன் ராஜா இயக்கவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.