சமீபத்தில் இணையதளம் முழுவதும் ரெண்டிங்கான ஹேஸ்டேக் “இந்தி தெரியாது போடா”. யுவன் சங்கர் ராஜா வில் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இந்த ஹேஸ்டேகில் உள்ள டீஷர்ட்டை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு அதை டிரென்ட் செய்தார்கள்.
இந்திய மொழியாக இந்தி திணிக்கப்படுவதற்கு எதிராக இவர்கள் இதை டிரென்ட் செய்தார்கள். ட்விட்டரில் இந்த ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதற்கு பல ஆதரவு கிடைத்து வரும் நிலையில் சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து நடிகர் அபிசரவணன் “இது ஒரு தவறான உதாரணம் என்று பதிவிட்டுள்ளார்.
மொழி மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாக தெளித்தால் அதன் மேல் இயல்பாக ஒரு வெறுப்பு வரும். அதுபோலத்தான் இந்தி திணிப்பினால் நமக்கு அதன் மேல் வெறுப்பு வந்துள்ளது. மற்றபடி அதுவும் இன்னொரு மொழிதான். அதை கற்பதால் நம் அறிவு மறுக்கப் போவதில்லை. இந்த நவீன காலத்தில் எந்த ஒரு விஷயத்தையும் புதிதாக கற்றுக் கொள்வதில் தவறில்லை. ஆனால் சில பிரபலங்கள் லைக் பெறுவதற்காக இப்படி தவறான உதாரணத்தை பரப்பி வருகிறார்கள் என்று தன் கருத்தை வெளியிட்டுள்ளார் அபிசரவணன்.