ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தன் இசை மற்றும் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான “கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா, 2012ஆம் ஆண்டு திங்க் மியூசிக் கிரியேட்டர்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழன் என்று ஆல்பம் வெளியிட்டார்.
தற்போது நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, இந்த லாக்டவுனில் பல வருடங்களுக்கு பிறகு தனி ஆல்பம் ஒன்றை தற்போது வெளியிடவுள்ளார். பட வேலைகளில் பிசியாக இருந்ததால் இவ்வளவு நாள் தனி ஆல்பம் வெளியிடவில்லை போல.
ஏற்கனவே வெளியிட்டதை போல “நான் ஒரு ஏலியன்” எனும் இண்டிபென்டன்ட் ஆல்பத்தை தற்போது தீங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த ஆல்பத்தின் “நெட்ட தொறந்த” என்ற சிங்கிள் வெளியாகி ஹிப்ஹாப் தமிழா ரசிகர்களிடையே வைரலாகி வந்தது. இந்நிலையில் இந்த முழு ஆல்பமும் தற்போது வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதை வெளியிட்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் இண்டிபெண்டன்ட் கிரியேட்டர்ஸ் உலகில் ஒரு புதுமை என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/hiphoptamizha/status/1294238383321960448