ஹிப்ஹாப் தமிழா ஆதியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட்!

  • October 20, 2020 / 10:49 PM IST

ஹிப்ஹாப் தமிழா என்றழைக்கப்படும் ஆதி, இண்டிபெண்டன்ட் ஆல்பம் வெளியிட்டு அதன்மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின் அதிலிருந்து தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக காலடியெடுத்து வைத்து தற்போது படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தன் இசை மற்றும் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். 2011ம் ஆண்டு வெளியான “கிளப்புல மப்புல” என்ற பாடல் மூலம் ரசிகர்களிடம் கவனத்தைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா, 2012ஆம் ஆண்டு திங்க் மியூசிக் கிரியேட்டர்ஸ் மூலம் ஹிப்ஹாப் தமிழன் என்று ஆல்பம் வெளியிட்டார்.

தற்போது நடிகர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பல பரிமாணங்களை எடுத்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி சமீபத்தில் மீண்டும் தனது இன்டிபென்டன்ட் ஆல்பம் ஒன்றை வெளியிட்டார். இந்த ஆல்பம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது ஹிப்ஹாப் தமிழா மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகவும், அந்த திரைப்படத்தில் அவரே நடிப்பதாக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான செய்தியை விரைவில் திரைப்படக் குழு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த செய்தி வெளியானதிலிருந்து ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus