நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சூப்பர் ஹீரோ படமான ‘வீரன்’ கடந்த ஜூன் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை ‘மரகத நாணயம்’ படம் மூலம் ஃபேமஸான ARK சரவன் இயக்கியுள்ளார். இதில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு ஜோடியாக ஆதிரா ராஜ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் வினய், முனிஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்துள்ள இதற்கு தீபக்.டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரசன்னா.ஜிகே படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ளது.
தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.11.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.