‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ள ‘அன்பறிவு’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இவர் நடிப்பில் ‘அன்பறிவு’ மற்றும் இயக்குநர் ARK சரவன் படம் என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அன்பறிவு’ படத்தின் ரிலீஸுக்காக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ரசிகர்கள் பல நாட்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று (ஜனவரி 7-ஆம் தேதி) இப்படம் பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’-யில் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அஷ்வின் ராம் இயக்கியுள்ளார். இதில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளாராம். மேலும், மிக முக்கிய ரோல்களில் நெப்போலியன், காஷ்மீரா பர்தேஷி, ஷிவானி ராஜசேகர், சாய் குமார், ஆஷா சரத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு எதிராக மோதும் வில்லன் ரோலில் விதார்த் நடித்துள்ளார். இந்த படத்துக்கு மகேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்போது, இப்படத்தை ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

Share.