மூன்றாவது முறையாக இணையும் மாஸ் ஹீரோக்கள் !

  • January 28, 2023 / 07:39 PM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .அரண்மனை 3 படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி இருந்தார் .யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . திரையரங்கில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது .

இந்நிலையில் சுந்தர் .சி அடுத்து அரண்மனை 4 படத்தை அடுத்து இயக்க உள்ளார் என்று கூறப்படுகிறது . இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளார் . இது ஒரு பக்கம் இருக்க இயக்குநர் சுந்தர்.சி அவர்களின் கனவு படமான சங்கமித்ரா படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் . 400 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஆர்யா மற்றும் விஷால் ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . பொன்னியின் செல்வன் படத்துக்கு நிகராக இந்த படம் பிரமாண்டமாக எடுக்க உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus