ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கதாநாயகியாக இருந்தவர் நடிகை ராதிகா . தற்போது இவர் அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் , தமிழ் சினிமாவில் உள்ள மிக நல்ல நடிகைகளில் இவரும் ஒருவர் . கிழக்கே போகும் ரயில் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா .
தமிழ் ஸ்டடீஸ் யூகே எனும் அமைப்பின் சார்பாக இங்கிலாந்து பார்லிமென்ட் உறுப்பினர் மரியா மில்லர் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளார் . அந்த விழாவில் உலகெங்கும் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்.ராதிகாவுக்கு லண்டன் பார்லிமென்ட்டில் நடந்த விழாவில் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதை பெறுவதற்காக ராதிகா லண்டன் சென்று இருந்தார் .
விருது வழங்கும் விழாவில் பேசிய ராதிகா “இங்கிலாந்து பார்லிமென்ட்டில் விருது பெற்றது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் நிரம்பிய தருணம். இவ்விருதிற்கு என்னை தேர்ந்தெடுத்த தேர்வு குழுவினருக்கும், இத்தனை ஆண்டு காலம் எனக்கு ஆதரவளித்த திரை மற்றும் தொலைக்காட்சித் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும் மிக்க நன்றி என்று கூறியுள்ளார்.